ட்விட்டர் திடீர் முடிவால் ஆட்டம் கண்ட டொனால்டு ட்ரம்ப் ஃபாளோவர்கள்

ட்விட்டரில் லாக் செய்யப்பட்ட கணக்குகள் முடக்கப்படுவதால் டொனால்டு டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரை பின்தொடர்வோர் (ஃபாளோவர்கள்) எண்ணிக்கை முறையே சுமார் ஒரு லட்சம் மற்றும் நான்கு லட்சம் வரை குறைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள், வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் இவற்றை எதிர்கொள்ள அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ட்விட்டரில் லாக் செய்யப்பட்ட ஐ.டி.க்கள் முடக்கப்படுகின்றன.
லாக் செய்யப்பட்ட அக்கவுன்ட்களை முடக்குவதால் ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் ஃபாளோவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியிருக்கிறது. உலகளவில் பல லட்சம் கணக்குகள் முடக்கப்படுவதால் இவ்வாறு ஃபாளோவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
“புதிய நடவடிக்கை பலருக்கு பாதகமாக இருந்தாலும், இதுபோன்ற முடிவுகளால் பொதுப்படை கருத்துக்களை விவாதிக்க  ட்விட்டர் அதிக நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும்,” என ட்விட்டர் நிறுவன சட்ட வல்லுநர், திட்டம் மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் விஜாயா கடே தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
லாக் செய்யப்பட்ட அக்கவுன்ட்கள் பெரும்பாலும் மக்களால் உருவாக்கப்படுவதால், இது ஸ்பேம் அல்லது ரோபோட்களாக இருக்க வாய்ப்புகள் குறைவு தான். ட்விட்டர் பயன்பாட்டில் அதிகப்படியான திடீர் மாற்றங்களை கவனிக்கும் பட்சத்தில் இதுபோன்ற அக்கவுன்ட்களை ட்விட்டர் கண்டறிந்து கொள்ளும்.
தற்போதைய நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்பதால், ட்விட்டர் ஃபாளோவர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படலாம் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதுகுறித்து வெளியான தகவல்களில் கடந்த சில மாதங்களில் ட்விட்டர் பல லட்சம் கணக்குகளை முடக்கி வருகிறது, இதனால் மாதாந்திர ட்விட்டர் பயனர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் ஏழு கோடி கணக்குகளை ட்விட்டர் முடக்கியதைத் தொடர்ந்து ஜூலை மாதத்திலும் கணக்குகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது. ட்விட்டர் தலைமை நிதி அலுவலர் நெட் சீகல் இந்த நடவடிக்கை காரணமாக ட்விட்டர் பயனரின் எண்ணிக்கை பாதிக்கப்படாது என ட்வீட் செய்திருக்கிறார்.
தற்சமயம் ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 33 கோடிகளாக இருக்கின்றன. இது குறித்து சீகல் மேலும் கூறும் போது, “ட்விட்டரில் சைன்-அப் செய்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில் லாக்-இன் செய்தோ அல்லது 30 நாட்களுக்கும் அதிகமாக பயன்படுத்தாமல் இருக்கும், எங்களது பட்டியலில் இல்லாத கணக்குகளை நாங்கள் முடக்குகிறோம்,” என தெரிவித்திருக்கிறார்.
“ஒருவேளை ஏழு கோடி பேரின் கணக்குகளை ட்விட்டரில் இருந்து முடக்கியிருந்தால், அதனை நாங்களாகவே நேரடியாக உங்களுக்கு தெரிவிப்போம்” என சீகல் தனது மற்றொரு ட்வீட்-இல் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »