ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்

ஜியோபோனில் ஃபேஸ்புக் செயலி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்டு 15-ம் தேதி முதல் இந்த செயலிகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய மென்பொருள் அப்டேட் மூலம் கூகுள் மேப்ஸ் செயலி ஜியோபோனில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலி கை ஓ.எஸ். தளத்துக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஜியோபோன் பயனர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்கும் நோக்கில் செயலி உருவாக்கப்படுகின்றன. ஜியோபோன் 2 மாடல் வெளியாகும் போதே இந்த செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபோனினை அப்டேட் செய்ததும், ஜியோஸ்டோர் சென்று கூகுள் மேப்ஸ் செயலியை ஹோம் பேஜில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
முதற்கட்டமாக கூகுள் மேப்ஸ் செயலியில் அடிப்படை அம்சங்களை பயன்படுத்த முடியும். அந்த வகையில் பயனர் தங்களுக்கு தெரியாத இடங்களுக்கு மேப் மூலம் சென்றடைய முடியும். இத்துடன் பைக் ரூட் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
கூகுள் மேப்ஸ் தகவல்களை லேயர்கள் அல்லது பிரத்யேக மேப் வியூக்கள் மூலம் பார்க்க முடியும். குறிப்பிட்ட இடங்களை தேடவோ அல்லது நீங்கள் இருக்குமிடத்தை மேப்-இல் பார்க்க முடியும்.
கை ஓ.எஸ். இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலி வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், நோக்கியா 8110 4ஜி மொபைலிலும் இந்த செயலி விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.#jiophone #GoogleMaps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »