50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்

ஜிகாஃபைபர் அறிவிப்பை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பி.எஸ்.என்.எல். FTTH ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 விலை சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு 50 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ரூ.1,045 பி.எஸ்.என்.எல். ஃபைப்ரோ ULD 1045 CS48 சலுகையில் மாதம் 150 ஜிபி டேட்டா 30Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. இதே சலுகையில் ஏற்கனவே 100 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
ரூ.1,395 ஃபைப்ரோ BBG ULD 1395 CS49 சலுகையில் மாதம் 200 ஜிபி டேட்டா 40Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.1,895 சலுகையில் மாதம் 250 ஜிபி டேட்டா 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகைகள் தற்சமயம் கேரளாவில் மட்டுமே வழங்கப்படுகிறது.
சமீபத்தில் பி.எஸ்.என்.எல். ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.4,999 சலுகையில் 1500 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. முதற்கட்டமாக 1500 ஜிபி வரையிலான டேட்டாவிற்கு 100Mbps வேகமும், அதன்பின் டேட்டா வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும். புதிய ரூ.4999 சலுகையில் பி.எஸ்.என்.எல். எண்களுக்கு இலவச வாய்ஸ் கால், மின்னஞ்சல் வசதி மற்றும் ஸ்டேட்டிக் IP முகவரி வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். ரூ.999, ரூ.1,299, ரூ.1,699, ரூ.1,999 மற்றும் ரூ.2,999 சலுகைகளும் சமீபத்தில் மார்றம் செய்யப்பட்டன. இத்துடன் 20Mbps வேகத்தில் டேட்டா வழங்கும் நான்கு பிராட்பேன்ட் சலுகைகளை அறிவித்தது. இவற்றின் கட்டணம் ரூ.99 முதல் துவங்குகிறது. இவை ஃபைபர் அல்லாத சலுகைகள் என்பதால் பயனர்கள் பாதுகாப்பு முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
பி.எஸ்.என்.எல். ரூ.99 சலுகையில் ஒரு மாத காலத்துக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக குறைக்கப்படும்.
பி.எஸ்.என்.எல். ரூ.199 சலுகையில் தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக குறைக்கப்படும்.
இதேபோன்று ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 10 ஜிபி டேட்டா என மாதம் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.399 சலுகையில் தினமும் 20 ஜிபி டேட்டா என மாதம் 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »