ரூ.4-க்கு ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் சியோமி

சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டு விழா விற்பனை இன்று துவங்குகிறது. Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு விற்பனை ஜூலை 12-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சியோமி ஆண்டு விழா சிறப்பு விற்பனை மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் நிலையில், ஜூலை 8-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
கவர்ச்சிகர சலுகைகள் மட்டுமின்றி ரூ.4 விலையில் ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் Mi எல்இடி டிவி 4 (55-இன்ச்), ரெட்மி வை2, ரெட்மி நோட் 5 ப்ரோ, Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை பயனர்கள் ரூ.4 விலையில் வாங்கிட முடியும். இதேபோன்று Mi மிக்ஸ் 2 மற்றும் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆண்டு விழா சிறப்பு விற்பனைக்கென சியோமி நிறுவனம் ஸ்டேட் பேங்க், மொபிக்விக் உள்ளிட்டவற்றுடன் இணைந்து உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேகே உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. அந்த வகையில் ரூ.7500 வரை பொருட்களை வாங்கும் ஸ்டேட் பேங் பயனர்கள் ரூ.500 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இதேபோன்று ரூ.8,999 வரை பொருட்களை வாங்குவோர் பேடிஎம் வாலெட் மூலம் பணத்தை செலுத்தும் போது ரூ.500 கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் மொபிக்விக் மூலம் பணத்தை செலுத்தும் போது 25% தள்ளுபடி (அதிகபட்சம் ரூ.3000) வரை சூப்பர்கேஷ் பெற முடியும்.
ரூ.4 ஃபிளாஷ் விற்பனை:
இன்று (ஜுலை 10) மாலை 4.00 மணிக்கு ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதே போன்று ஜூலை 11 மற்றும் ஜுலை 12 ஆகிய தேதிதகளிலும் ரூ.4 ஃபிளாஷ் விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ரெட்மி வை1, Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4 55 இன்ச், Mi பாடி கம்போசிஷன் ஸ்கேல், ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை ரூ.4 விலையில் வாங்க முடியும். இதேபோன்று Mi ப்ரோடெக்ட் ரூ.300 வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.
Mi ஆண்டு விழா சிறப்பு தள்ளுபடிகள்:
சியோமியின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ரூ.27,999 (ரூ.29,999), Mi மேக்ஸ் 2 ரூ.14,999 (ரூ.15,999), பேக்பேக் விலை ரூ.1,899 (ரூ.1,999), Mi இயர்போன்கள் ரூ.649 (ரூ.699), Mi பேன்ட் 2 ரூ.1,599 (ரூ.1,799) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் சியோமி டிராவல் காம்போ சலுகையின் கீழ் Mi டிராவல் பேக்பேக் மற்றும் Mi ஸ்டிக் ட்ரைபாட் இணைந்து வாங்கும் போது ரூ.2,948-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று Mi பேன்ட் HRX எடிஷன் மற்றும் Mi பேன்ட் ஸ்டிராப் புளு விலை ரூ.1,398 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Mi பிளாக்பஸ்டர் விற்பனை:
சியோமி சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஜுலை 10-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு விற்பனைக்கு வரயிருக்கிறது. இதேபோன்று Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ (32 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச்) மாடல்களும் ஜுலை 10-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதேபோன்று ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஜூலை 11-ம் தேதி மதியம் 2.00 மணிக்கும், ரெட்மி 5 ஸ்மார்ட்போன் ஜூலை 12-ம் தேதி மதியம் 2.00 மணிக்கு நடைபெறுகிறது.
குறைந்த கால சலுகை:
சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஜூலை 10 முதல் 12-ம் தேதி வரை மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. ரெட்மி நோட் 5 மற்றும் Mi வி.ஆர். பிளே 2 காம்போ ரூ.9,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி வை1 மற்றும் Mi ப்ளூடூத் ஹெட்செட் காம்போ ரூ.8,999 விலையில் விற்பனை  செய்யப்படுகிறது. இதேபோன்று Mi இயர்போன் பேசிக் காம்போ ரூ.1,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »