பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையரா நீங்கள்..?? அப்ப இத படிங்க

இலங்கையில் பேஸ்பு பயன்படுத்துவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியளாளர் ரொஷான் சந்திரகுப்தாவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Image result for facebook

இலங்கையில் போலி பேஸ்புக் கணக்குகள் வைத்திருப்பவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பயன்பாட்டாளர்கள் உடனடியாக பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவு செய்யப்பட்டால் அந்த முறைப்பாடுகளுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

அதற்கமைய போலி போஸ்புக் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே போலி பேஸ்புக் கணக்குகளை பேஸ்புக் அமைப்பு நிறுத்தியுள்ளது.

Related image

அத்துடன் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பாக 3600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் செய்யப்பட்ட முறைப்பாடுகளாகும்.

இந்த வருடத்தில் 1250 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

போலி பேஸ்புக் புத்தக கணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க முடியும். 0112691692 என்ற இந்த தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் முறைப்பாடுகளை அறிவிக்கலாம் என்கிறார் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியளாளர் ரொஷான் சந்திரகுப்தா.

Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »