ஜியோஃபை ரவுட்டர் விலை பாதியாக குறைப்பு

ஜியோஃபை 4ஜி ரவுட்டர் விற்பனையை அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோ புதிய கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் பயனர்களுக்கு ரூ.500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் புத்தம் புதிய ஜியோஃபை சாதனத்தை ரூ.499 விலையில் பெற முடியும்.
முன்னதாக ஜியோஃபை சாதனத்தின் விலை ரூ.1,999-இல் இருந்து ரூ.999 ஆக குறைக்கப்பட்டது. புதிய கேஷ்பேக் சலுகையின் கீழ் பயனர்கள் முதலில் புதிய ஜியோஃபை சாதனத்தை வாங்க வேண்டும், ஏற்கனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.
ஜூலை 3-ம் தேதி முதல் வழங்கப்படும் புதிய கேஷ்பேக் சலுகையை பெற இறுதி தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஜியோ ஸ்டோர் மட்டுமின்றி அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வலைத்தளங்களிலும் ஜியோஃபை விற்பனை செய்யப்படுகிறது.
ஜியோஃபை கேஷ்பேக் சலுகையை பெற பயனர்கள் சாதனத்தை வாங்கி, புதிய போஸ்ட்பெயிட் சிம் கார்டை பெற வேண்டும். பின், ரூ.199 எனும் குறைந்தபட்ச தொகையில் உள்ள சலுகையை பெற்று, 12 மாதங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 12 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த தொகையை மற்ற கட்டணங்களில் தள்ளுபடி செய்து கொள்ள முடியும்.
ஜியோ போஸ்ட்பெயிட் ரூ.199 சலுகையில் பயனர்களுக்கு 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் மெசேஜ்கள், ஜியோ செயலிகளுக்கான பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்னதாக ஜியோ ஒப்போ மான்சூன் சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்களுக்கு ரூ.4,900 மதிப்புடைய சேவைகள் வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »