நாய்களைப் போன்றே ஆடுகளும் புத்திக்கூர்மையுடையவை, அன்பானவை என்கிறது விஞ்ஞானம்

மற்றைய மிருகங்களைப் போன்று ஆடுகள் தழுவத் தூண்டும் விலங்ககுகளில்லாமல் இருக்கலாம், ஆயினும் ஆய்வுகள் நாய்களைப் போன்றே அவையும் கெட்டித்தனமுடையவை, மனிதர்களுடன் உணர்வு ரீதியிலான உறவுகளை ஏற்படுத்தக்கூடியன என்கிறது.

2016 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, தமது உரிமையாளர்களால் வழங்கப்பட்ட கடினமான இலக்குகளை செய்ய கஷ்ரப்படும் வேளைகளில் அவர்களை கடுமையாக முறைக்கின்றது என்பதை வெளிப்படுத்தியிருந்தது. இது நாய்கள் காட்டும் இயல்புகளில் ஒன்று.

என்னதான் ஆடுகள் செல்லப்பிராணகளாக வளர்க்கப்படாதுவிடினும் 10 000 ஆண்டுகளாக விவசாயத் தேவைகளுக்காக வளர்க்கப்பட்டுவருகின்றன.

இதுவரையில் விஞ்ஞானிகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டுவரும் நாய்கள், பூனைகள், குதிரைகள் போன்றனவே மனிதர்களுடன் உறவுகளை பேண முடிவதாக நம்பியிருந்தனர்.

ஆனாலும் ஆடுகளும் இதுபோன்ற பண்புகளை காட்டுவது தற்போது அறியப்பட்டுள்ளது.

2016 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 34 ஆடுகள் பெட்டியொன்றிலிருந்த அவற்றுக்கான வெகுமதிகளைப் பெற மூடி வாயிலாக உட்செல்ல பணிக்கப்பட்டிருந்தன. இதற்கென அவை பல தடவைகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இறிதியாக அவையால் இயலாமல் போயிருந்தது. இதன் போது அவை எவ்வாறு நடந்து கொண்டன பற்றி பதிவுசெய்யப்பட்டிருந்தது.

அவை தங்களால் இயலாத இலக்கை அடைய பணிக்கப்பட்டிருந்தமையை உணர்ந்த பின் திரும்பி தம்மைப் பணித்த உரிமையாளரை நீண்ட நேரமாகப் பார்த்து முறைத்தன. இவை மனிதர்களின் நடத்தைக்கேற்ப தமது பார்வையை விருத்திசெய்யக் கூடியன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »