பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி

விவோ நெக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டுக்கான அழைப்பிதழ்களை விவோ வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஜூலை 19-ம் தேதி விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.
புதிய ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சமாக அதன் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், மிகவும் மெல்லிய பெசல்கள், ஸ்கிரீன் சவுன்ட்கேஸ்டிங் தொழில்நுட்பம், 8 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா உள்ளிட்டவை இருக்கின்றன. இதன் பாப்-அப் செல்ஃபி கேமரா, ஸ்மார்ட்போனின் கேமரா செயலியை க்ளிக் செய்தால் தானாக திறந்து கொண்டு, மீண்டும் தானாக உள்ளே சென்று விடும்.
இவ்வகை கேமரா மிகவும் சிறிய-ரக மோட்டார்களை பயன்படுத்துகிறது. இந்த மோட்டார்களுக்கு பிரத்யேக ஐசி மற்றும் பிரெசிஷன் கன்ட்ரோல் அல்காரிதம்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவோ தெரிவித்துள்ளது. இதில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மூன்றாம் தலைமுறையை சேர்ந்த இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அளவில் சிறியதாகவும், அதிக செயல்திறன் மற்றும் 10% வேகமாக அன்லாக் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
விவோ நெக்ஸ் ஏ / நெக்ஸ் எஸ் (அல்டிமேட்) சிறப்பம்சங்கள்:
– 6.59 இன்ச் 2316×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + சூப்பர் AMOLED 19.3:9 டிஸ்ப்ளே
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் (நெக்ஸ் எஸ்)
– அட்ரினோ 630 GPU (நெக்ஸ் எஸ்)
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm சிப்செட் ( நெக்ஸ் ஏ)
– அட்ரினோ 616 GPU ( நெக்ஸ் ஏ)
– 8 ஜிபி ரேம், 256 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி (நெக்ஸ் எஸ்)
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி (நெக்ஸ் ஏ)
– டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 12 எம்பி டூயல் PD பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, f/1.8
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (நெக்ஸ் எஸ்)
– பின்புறம் கைரேகை சென்சார் (நெக்ஸ் ஏ)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி, 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் டைமன்ட் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் விலை 4498 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.47,375) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் 256 ஜிபி வெர்ஷன் விலை 4998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,640) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் கொண்ட நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன் விலை 3898 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,055) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »