மிகச்சிறந்த தமிழ்/ஆங்கில மொபைல் அகராதி அப்ளிக்கேஷன்

எனவே இன்று ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் புத்தக ரீதியில் பயன்படுத்தி வந்த அகராதிகளை ஒரு புறம் வைத்துவிட்டு கணினி மற்றும் ஸ்மார்ட் போன்கள் மூலம் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் அகராதிகளின் பக்கம் திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான டிஜிட்டல் அகராதிகள் இலகுவானதும் வேகமானதும் ஆகும். மேலும் இவைகள் தட்டச்சு செய்யும் சொற்களை மொழிபெயர்ப்பதற்கு மேலதிகமாக இன்ஸ்டன்ட் கேமரா ட்ரான்ஸ்லேசன், ஆப்லைன் ட்ரான்ஸ்லேசன் என்பன போன்ற வசதிகளையும் தருகின்றன.

டிஜிட்டல் அகராதி எனும்போது அனைவருக்கும் ஞாபகம் வருவதும் பரவலாக பயன்படுத்தப்படுவதும் “கூகுள் ட்ரான்ஸ்லேட்” எனும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையாகும். இது அறிமுகப்படுத்தப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியான மேம்படுத்தலின் ஊடாக பல அருமையான வசதிகளை அதன் பயனர்களுக்கு வழங்கி வந்துள்ளது.

யூ-டிக்ஸ்னரி ஆப்:

கூகுள் ட்ரான்ஸ்லேட் போன்ற ஆனால் வசதிகளில் சற்று வேறுபட்ட ஒரு அகராதியே யூ-டிக்ஸ்னரி எனும் டிஜிட்டல் அகராதி ஆகும். இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Google Translate Tap To Translate

கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியில் போன்றே யூ-டிக்ஸ்னரி செயலியிலும் ஆப்லைன் ட்ரான்ஸ்லேசன் மற்றும் Tap To Translate போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது இணைய இணைப்பு இன்றியே ஒரு மொழியை இன்னுமொரு மொழிக்கு மாற்றும் வசதியும் Copy செய்த சொற்களை உடனுக்குடன் மொழி பெயர்ப்பதற்கான விட்ஜெட் வசதியுமே அவைகள் ஆகும்.

யூ-டிக்ஸ்னரி செயலியில் உள்ள வசதிகள்:

English to Tamil Google Dictionary
கூகுள் ட்ரான்ஸ்லேட்
  • கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியில் குறிப்பிட்ட ஒரு சொல்லுக்கு தரப்படும் மொழிபெயர்ப்புக்கு மேலதிகமாக மேலும் பல ஒத்த கருத்துள்ள சொற்களை யூ-டிக்ஸ்னரி செயலியில் பெற முடிகிறது. இதன் காரணமாக எமக்குத் தெரியாத மொழியில் உள்ள சொல்லின் கருத்தை மிகச் சரியாக அறிந்துகொள்ள முடிகிறது.
English to Tamil U Dictionary
யூ-டிக்ஸ்னரி
  • யூ-டிக்ஸ்னரி செயலியில் வழங்கப்பட்டுள்ள Word Lock Screen எனும் வசதியானது உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீனை அன்லாக் செய்யும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு புதிய சொல்லையும் அதற்கான கருத்தையும் அறிந்துகொள்ள உதவுகிறது. இதற்கு இணைய இணைப்பு அவசியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Word Lock Screen

  • இதில் இலகு ஆங்கிலத்தில் ஆக்கங்கள், ஆங்கில அறிவை விருத்தி செய்யும் வகையிலான விளையாட்டுக்கள், சொற்களுக்கு படம் மூலமான விளக்கங்கள் போன்றனவும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

 

  • மொத்தமாக 38 மொழிகளுக்கு ஆதரவு அளிக்கும் இது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆதரவளிக்கிறது. தம்மை தாமே முன்னேற்றிகொள்ள எத்தனிக்கும் நபர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. பின்வரும் இணைப்புகள் மூலம் இதனை டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளலாம்.

டவுன்லோட் யூ-டிக்ஸ்னரி ஆண்ட்ராய்டு

டவுன்லோட் யூ-டிக்ஸ்னரி ஐபோன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »