மனிதர்களின் இறப்பை துல்லியமாக கணிக்கும் கூகுள்!

இதுவரை பல விடயங்களை வெளிப்படுத்தி வந்த கூகுள் தற்போது ஒரு முக்கிய தகவலைவெளியிட்டுள்ளது.

அதற்கமைய மனிதர்களின் உடல் செயல்பாடுகளை கணித்து வந்த கூகுளின் செயற்கை நுண்ணறிவு தற்போது மனிதர்களின் இறப்பை 95% துல்லியமாக கணிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மனிதனின் உடல்நிலை மற்றும் மருத்துவம் சார்ந்த செயற்கை நுண்ணறிவுகளை கூகுள் நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதற்கமைய தற்போது மனிதனின் இறப்பைக் கணிக்கும் செயற்கை நுண்னறிவை உருவாக்கியுள்ளது.

உந்த செயற்கை நுண்ணறிவு மருத்துவரை விட துல்லியமாக செயல்படுத்திக் காட்டியிருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் தெரிவித்துள்ளது. ஒரு பெண் மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 9.3% மட்டுமே இறப்பதற்கு வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணின் உடல்நிலை பற்றி கூகுளின் செயற்கை நுண்ணறிவு 1,75,639 மருத்துவத் தரவுகளை கொண்டு ஆராய்ந்து அந்தப் பெண் 19.9% இறப்பதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியது. அதேபோல் அந்தப் பெண் சில நாள்களுக்குள் இறந்துவிட்டார்.

மிக குறைந்த நேரத்தில் பல்வேறு மருத்துவத் தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்து இறப்பை துல்லியமாகக் கணித்துள்ளது. இதன்மூலம் இந்த செயற்கை நுண்ணறிவு 95% வரை துல்லியமாக கணித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கூகுளின் இந்த செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »