64 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி

64 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி
ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை ரியல்மி பிராண்டு இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி கேமரா இன்னோவேஷன் ஈவென்ட் நடைபெற இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது. இந்நிகழ்வில் ரியல்மி பிராண்டு 64 ம்.பி. குவாட் கேமரா சென்சார்கள் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் 64 எம்.பி. GW1 1/1.72″ சென்சார் மற்றும் 1.6µm பிக்சல் வழங்கப்படுகிறது.
ரியல்மி டீசர்
இதன் 64 எம்.பி. பிக்சல் மெர்ஜிங் டெட்ராசெல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும். சீரான வெளிச்சமுள்ள பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்கள் ஒன்றிணைக்கப்பட்டு புகைப்படங்கள் 64 எம்.பி. தரத்தில் வழங்கும்.
இத்துடன் புதிய கேமரா சென்சாரில் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். மற்றும் அதிகபட்சம் 100 டெசிபல் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி முன்னதாக 64 எம்.பி. கேமரா போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.