ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு ஹுவாயின் புதிய இயங்குதளம்

ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு ஹுவாயின் புதிய இயங்குதளம்
ஹூவாய் நிறுவனம் தனது சொந்த ஹார்மனிஒ.எஸ். இயங்குதளத்தை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் IoT சாதனங்களில் இயங்கும் வகையில் புதிய இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளம் ஹூவாயின் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக நான்கு முக்கிய பில்டிங் பிளாக்களை நினைவில் கொண்டு மைக்ரோகெர்னல் சார்ந்து உருவாக்கப்பட முதல் இயங்குதளம் ஹார்மனிஒ.எஸ். என ஹூவாய் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு தெரிவித்தார்.
ஹார்மனிஒ.எஸ்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஹார்மனிஒ.எஸ். மைக்ரோகெர்னல் சாதனத்தின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஹார்மனிஒ.எஸ். பயனர்களுக்கு நான்கு மிகமுக்கிய தொழில்நுட்ப அம்சங்களை வழங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஹூவாய் தனது ஹார்மனிஒ.எஸ். தளத்தை உலகம் முழுக்க ஓபன்-சோர்ஸ் பிளாட்ஃபார்மில் வெளியிட திட்டமிட்டுள்ளது. டெவலப்பர்களுடன் மிக நுணுக்கமாக இணைந்து செயல்படும் வகையில் ஓபன்-சோர்ஸ் பவுன்டேஷன் மற்றும் ஓபன்-சோர்ஸ் கம்யூனிட்டி முறையில் வழங்கப்படுகிறது.
பயனர்களுக்கு புதிய இயங்குதளம் சக்திவாய்ந்த அதிநவீன அம்சங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினருக்கும் புதிய ஹார்மனிஒஎஸ் பல்வேறு புதிய வசதிகளை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.