மக்களே உஷார்…. ஹேர் கலரிங் செய்தால் சரும புற்றுநோய் வருமாம்..!

மக்களே உஷார்…. ஹேர் கலரிங் செய்தால் சரும புற்றுநோய் வருமாம்..!

நாம் கூந்தலுக்கு கலரிங் செய்தால் சரும புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவ்த்துள்ளனர்!!

கூந்தலுக்கு மணம் இருக்கா இல்லையா  என்பதெல்லாம் பழைய காலச்சாரம். கூந்தலுக்கு என்ன கலர் அடிக்கலாம் என்பதே லேட்டஸ்ட் ஃபேஷனாக இருக்கிறது. அடர்ந்த கருங்கூந்தல் தான் பெண்களுக்கு அழகு என்று சொல்வார்கள்.ஆனால் இப்போது அப்படி அல்ல. அவ்வப்போது மாறும் கூந் தல் கலர்கள் தான் அழகு என்று உலாவருகிறார்கள்.

இயற்கையில் அழகு நிறைந்த கறுப்பு கூந்தல் தான் வயது ஆகும் போது வெள்ளி மின்னல் கீற்றுகளாய் வெள்ளை நிறமாய் மாறுகிறது. இயற் கையை இயற்கையாக ஏற்றுக்கொள்ளும் வரை உடலுக்கு எவ்வித பிரச்னைகளும் இல்லை. ஆனால் அழகுபடுத்துகிறேன் என்று ஆரஞ்சு, பிர வுன் கலர்களைப் பூசிக்கொள்ளும் போது கூந்தலின் அழகும் ஆரோக்யமும் கெட்டுவிடுகிறது என்பது தான் சரியாக இருக்கும்.

சரும நிபுணர்கள் ஹேர் கலரிங் செய்வது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார்கள். அழகில் ஆபத்து நிறைந்திருந்தாலும் அழகு தேவை என் பதே பல பெண்களின் விருப்பமாக இருக்கிறது. பொதுவாக இளநரை, அல்லது குறைந்த வயதில் முடி நரைத்துப் போனவர்கள் ஹேர் டை உப யோகிப்பார்கள். அவர்களும் தரமற்ற டைகளை உபயோகிப்பதன் மூலம் நரை மேலும் அதிகமாகவே செய்யும். இது ஒரு புறம் இருக்க இன்றைய இளம் தலைமுறையினர் இருபாலரும் கலரிங் செய்து கொள்வதை ஹாபியாக  வைத்திருக்கிறார்கள்.

ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது  நீண்ட நாட்கள் என்று அவர்களது விருப்பத்துக்கேற்றவாறு அழகு நிலையங்கள் செல்கிறார்கள். இந்தக் கலர் களை உண்டாக்கும் சாயங்கள் உடலுக்குள் பல்வேறு கேடுகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் சரும நிபுணர்கள். ஹேர் கலரிங் செய்ய லாம். ஆனால் கூந்தலின் நிறத்திலிருந்து அதிக வேறுபாடு இல்லாமல் இலேசான மாற்றம் செய்யலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

வித்தியாசமான கலரிங் செய்யும் போது கூந்தல் வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். கூந்தலின் வளர்ச்சி தடுக்கப்படும். சிலருக்கு சாயங்களின் ஒவ்வாமை நாளடைவில் கண்களிலும் பிரச்னைகளை உண்டாக்கிவிடும். சருமம் சம்பந்தமான உபாதைகளும் உண்டா கும் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.