புதிய ஜியோபோன் மற்றும் ஜிகாஃபைபர் திட்ட விவரங்கள் வெளியீட்டு விவரம்

புதிய ஜியோபோன் மற்றும் ஜிகாஃபைபர் திட்ட விவரங்கள் வெளியீட்டு விவரம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது 43 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அந்நிறுவனம் வணிக ரீதியில் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஜியோபோன் மாடலையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
புதிய ஜியோபோன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், முந்தைய ஆண்டுகளில் ஜியோ புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்திருக்கும் நிலையில், இந்த வாரம் புதிய ஜியோபோன் பற்றிய அறிவிப்பு இடம்பெறலாம் என எதி்ர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை இதுவரை வணிக ரீதியில் துவங்கப்படவில்லை. சில நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் அந்நிறுவனம் வழங்கவில்லை.
ஜியோ ஜிகாஃபைபர்
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிரீவியூ வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக ரூ. 4500 திரும்பப் பெறக்கூடிய கட்டணம் செலுத்தி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். எனினும், ஜியோ ஜிகாஃபைபர் திட்ட விலை விவரங்கள் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக வெளியான தகவல்களில் ஜியோ ஜிகாஃபைபர்  பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட போது, சில மாதங்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், புதிய ஜிகாஃபைபர் சேவைகளும் இலவசமாக வழங்கபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிதாய் ஃபைபர் சார்ந்த இணைப்புகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனத்துக்கு உள்கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு சவால் காத்திருக்கும் என வல்லுநர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.