நீங்க செல்போன் பைத்தியமா?….போச்சு அப்போ உங்களுக்கு ‘கொம்பு முளைக்கும்’

நீங்க செல்போன் பைத்தியமா?….போச்சு அப்போ உங்களுக்கு ‘கொம்பு முளைக்கும்’

நாம் செல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் என விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது!!

செல்போன் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தற்கால மக்களின் அனைவரின் கையிலும் செல்போன் முழு நேரமும் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறது. செல்போன் இல்லை என்றால், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு தான் பலருக்கும். ஆனால் அது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பயன்படும் ஒரு நல்ல கண்டுபிடிப்பு தான். ஆனால், நாம் அவசர தேவைக்கு அதை பயன்படுத்துவதை விட்டு விட்டுவிட்டு முழுநேரமும் அதற்கே அடிமைகளாக மாறி வருகின்றோம். அதற்கு அடிமையாகும் போது தான், நமக்கு பல பிரச்சனைகள் எழுகின்றன.

செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் பார்வை கோளாறு, நியாபக சக்தி குறைதல், எதிர்மறையான சிந்தனை, தூக்கமின்மை, புற்று நோய் என நோய்களை அடுக்கி கொண்டே போகலாம். இது ஒருபுறம் இருக்க, நாம் அதிகமாக செல்போன் உபயோகிப்பதால் மனிதனின் தலைக்குள் கொம்பு முளைக்கும் என ஒரு பகீர் தகவல் தான் தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.

செல்போனை அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்தி வந்தால், தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் ‘கொம்பு போன்ற கூர்மையான எலும்பு’ ஒன்று வளர்வதாக  விஞ்ஞானிகள்தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ”அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்துவதால் தலையின் முழு எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்கிறது. எனேவ தசை நார்கள் வளர்கின்றன. இதன் காரணமாக தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்கிறது” என தெரிவித்துள்ளார்கள். இது பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு எடுத்து செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.