டைப் செய்ய வேண்டாம்; நினைத்தாலே போதும்!’ – ஃபேஸ்புக்கின் அடுத்த `பிக்’ ப்ளான்

டைப் செய்ய வேண்டாம்; நினைத்தாலே போதும்!’ – ஃபேஸ்புக்கின் அடுத்த `பிக்’ ப்ளான்

`இது என்னடா புது வம்பா இருக்கு’ என்று பலரும் இப்போதிலிருந்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். `நினைத்தாலே டைப்பாகிடுமா?’ என்பது பலருக்கும் பீதியை கிளப்பியுள்ளது. அப்படியொரு முயற்சியைத்தான் ஃபேஸ்புக் முன்னெடுத்துள்ளது. இதெல்லாம் சாத்தியமா என்றால், அறிவியல் உலகில் இதெல்லாம் சாத்தியம்தான் என்கிறார்கள். குறிப்பாக, பிசிஐ என்று தொழில்நுட்ப ரீதியான வார்த்தை ஒன்றை பயன்படுத்துகிறார்கள். பிரெய்ன் – கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ் என்பதுதான் இதற்கு விளக்கம். இதுதொடர்பாக கலிபோர்னியா மற்றும் சான்ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனித மூளை

மனித மூளை

அவர்கள் தயாரித்த அல்காரிதம் மூலம், ஒருவர் நினைப்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எபிலிப்சிபி நோயால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளின் மூளையில் எலெக்ட்ரோகார்டிகோகிராஃபி கொண்டு அவர்கள் மூளையின் செயல்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன. அப்போது, அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு சத்தமாகப் பதிலளிக்குமாறு கூறப்பட்டது. நோயாளிகள் பேசும்போது, மூளையின் செயல்பாடுகளை அல்காரிதம் பதிவுசெய்தது. 76 சதவிகிதம் அவர்கள் பேசுவதற்கு முன்னதாகவே, அந்த வார்த்தைகளை அந்த அல்காரிதம் சரியாகக் கணித்திருக்கிறது. இதன்மூலம், பயனாளர்கள் நினைப்பதை அப்படியே எழுத்துகளாகக் கொண்டுவர முடியும் என்கிறது ஃபேஸ்புக். இது விரைவில் நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்றாலும், எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




Copyright © 2019 - Techtheme.com All rights reserved.