டவுன்லோடுகளில் புதிய உச்சம் கடந்த போக்கிமான் கோ

டவுன்லோடுகளில் புதிய உச்சம் கடந்த போக்கிமான் கோ
சர்வதேச சந்தையில் 2016 ஆம் ஆண்டு வெளியான போக்கிமான் கோ கேமினை இதுவரை சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருக்கின்றனர்.
புதிய டவுன்லோடுகளை கொண்டாடும் வகையில் போக்கிமான் நிறுவனம் பல்வேறு புதிய வீடியோக்களை ஜப்பானில் வெளியிட்டுள்ளது. 100 கோடி எண்ணிக்கையில், பலர் அன்-இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்திருக்கின்றனர். எனினும், வருவாய் அடிப்படையில் இது லாபகரமான ஒன்றாகவே இருக்கிறது.
துறை சார்ந்த ஆய்வாளர்களின் படி உலகளவில் ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து போக்கிமான் கோ வருவாய் 265 கோடி டாலர்களாக இருக்கிறது. இதே ஆண்டில் போக்கிமான் கோ வருவாய் 300 கோடி டாலர்களை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
போக்கிமான் கோ
நியான்டெக் உருவாக்கிய இந்த கேம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. வெளியான சில மாதங்களிலேயே போக்கிமான் கோ டவுன்லோடு எண்ணிக்கை 50 கோடிகளை கடந்தது. போக்கிமான் கோ கேம் தற்சமயம் நூற்றுக்கும் அதிகமான பிராந்தியங்களில் பிரத்யேக கேம் ரைடுகளை கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நியான்டெக் அறிமுகம் செய்த ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கேமான ஹாரி பாட்டர் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை பெறவில்லை. இதன் கேம்பிளே போக்கிமான் கோ போன்று இருந்தாலும், இது முந்தைய கேம் போன்ற டவுன்லோடுகளை பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.