ஜெட் பேக் மூலம் ஆங்கில கால்வாயை 20 நிமிடத்தில் கடந்து சாதனை!

ஜெட் பேக் மூலம் ஆங்கில கால்வாயை 20 நிமிடத்தில் கடந்து சாதனை!

ப்ரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒருவர், தான் கண்டுபிடித்த ஜெட் பேக் மூலம் ஆங்கில கால்வாயை கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ஃப்ரான்கி சபட்டா (Franky Zapata). முன்னாள் ஜெட்-ஸ்கி (வேகமாக செல்லும் படகு) சாம்பியனான இவர் ஜெட் பேக்குகளை உருவாக்கி அதை பரிசோதித்து பார்த்து வந்தார். இந்நிலையில், ஏற்கனவே தோல்வியில் முடிந்த ஆங்கில கால்வாயினை கடக்கும் முயற்சியினை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேற்கொண்டார்.

ஞாயிறு காலையில் ப்ரென்ச்சு நகரமான சங்கடேவிலிருந்து புனித மார்கரெட் கால்வாய் வரையிலான 34.4 கிலோ மீட்டரை (22 மைல்),5 டர்பைன்கள் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் ஜெட் பேக் கருவி மூலம், பூமியிலிருந்து 15 முதல் 20 மீட்டர் உயரத்தில் பறந்த படி மணிக்கு 190 கிமீ வேகத்தில்(மணிக்கு 119 மைல் வேகம் ) 20 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார்.

இந்த சாதனை குறித்து சபட்டா கூறுகையில்“இது வரலாற்றுச் சாதனையா இல்லையா என்ற தெரியாது; அதை நான் முடிவு செய்யவும் முடியாது; காலம் தான் பதில் சொல்லும் என்று கூறியுள்ளார். மேலும், “இந்த இயந்திரத்தை நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்துவிட்டேன். ஆனால் இப்போது தான் இதன் மூலம் இந்த கால்வாயை கடந்திருக்கிறேன் என்று வியப்பாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சபடா இந்த சாதனை முயற்சியை கடந்த ஜூலை 25ம் தேதி மேற்கொண்டார். ஆனால் பாதிவழியில் செல்லும்போதே கடலில் இருந்த அதிகப்படியான அலைகள் காரணமாக தரையிறங்க வேண்டிய படகை தவறவிட்டார். அந்த தவறு மீண்டும் நிகழாமல் இருக்க, பெரிய படகில் பெரிய இறங்கு தளத்தை சபடாவின் குழு உருவாக்கியிருந்தது.

சபடா செயல்படக்கூடிய இந்த கருவியை முதன் முதலில் 2018ல் உருவாக்கி அதற்கான உரிமத்தை ஃப்ரெஞ்சு இராணுவத்திற்கு 1.3 மில்லியன் யூரோவிற்கு(இந்திய மதிப்பில் சுமார் 10.5 கோடி ரூபாய்) விற்றார். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மைக்ரோ ஜெட் எஞ்சினை இராணுவத்திற்கு தயாரிக்கவுள்ளது ஃப்ரெஞ்சு ராணுவம். இந்த கருவியை தயாரித்து ஜூலை 14ம் தேதி பாஸ்டில் நாள் நிகழ்வின் போது மக்கள் கூட்டத்தின் மேள் பறந்து சாதனை நிகழ்த்தியதன் மூலம் “பறக்கும் போர் வீரன்” என்ற பட்டப்பெயரை பெற்றிருக்கிறார் சபடா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.