சந்திரயான்-2 எடுத்த பூமியின் முதல் புகைப்பட தொகுப்பை ISRO வெளியீடு!

சந்திரயான்-2 எடுத்த பூமியின் முதல் புகைப்பட தொகுப்பை ISRO வெளியீடு!

பூமியை முதல்முறையாக படம்பிடித்த சந்திரயான்-2 விண்கலத்தின்  புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) சந்திரயான்-2 விக்ரம் லேண்டரால் கைப்பற்றப்பட்ட பூமியின் முதல் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த படங்களை ஞாயிற்றுக்கிழமை மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் இஸ்ரோ வெளியிட்டது. சந்திரயான்-2 Ll4 கேமரா மூலம் பூமி அழகாக பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சனிக்கிழமை எடுக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான் – 2 விண்கலம்,  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் உதவியுடன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான் -2 விண்கலம் புவியின் நான்காவது சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு சரியான பாதையில் பயணித்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சந்திரயான் -2, தன்னிடம் உள்ள  Ll4 கேமராவின் உதவியுடன் முதல் முறையாக புவியை படம்பிடித்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ ஒரு அறிக்கையில், “சந்திரியன் -2 புவியின் நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் சூழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 2, 2019) 1527 மணிநேரத்தில் (IST) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது, திட்டமிட்டபடி, உள்நோக்கி உந்துவிசை முறையைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு காலத்திற்கு 646 வினாடிகள். அடையப்பட்ட சுற்றுப்பாதை 277 x 89472 கி.மீ ஆகும். அனைத்து விண்கல அளவுருக்கள் இயல்பானவை”. அடுத்த சுற்றுப்பாதை உயர்த்தும் சூழ்ச்சி 2019 ஆகஸ்ட் 6 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை (IST) திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.