கூகுள் அசிஸ்டண்ட் மாதாந்திர பயணிகள் விவரம் வெளியீடு

கூகுள் அசிஸ்டண்ட் மாதாந்திர பயணிகள் விவரம் வெளியீடு
கூகுள் நிறுவனத்தின் அசிஸ்டண்ட் சேவையினை உலகம் முழுக்க சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கூகுள் அசிஸ்டண்ட் சேவை இயங்கும் சாதனங்கள் எண்ணிக்கையும் 50 கோடிக்கும் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்ட சுமார் 10 கோடிக்கும் அதிகமான சாதனங்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருந்தது.
அமேசானை விட கூகுள் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் ஆகும். கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சுமார் 250 கோடிக்கும் அதிகமான சாதனங்களில் இயங்குகிறது. அந்த வகையில் நான்கில் ஒரு சாதனத்திற்கும் குறைவாகவே கூகுள் அசிஸ்டண்ட் சேவை பயன்படுத்தப்படுகிறது.
கூகுள் அசிஸ்டண்ட்
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனங்களில் சுமார் 200 கோடி சாதனங்களில் கூகுள் அசிஸ்டண்ட் சேவை பயன்படுத்தப்படவில்லை என தெரிகிறது. இதற்கான காரணம் சேவை சீராக இல்லாதது மற்றும் பயனர்கள் இதனை பயன்படுத்த மறுப்பது உள்ளிட்டவைகளாக இருக்கலாம்.
கூகுள், அமேசான், ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்த வைக்கவே விரும்புகின்றன. இந்நிறுவனங்கள் வாய்ஸ் டேட்டா விவரங்களில் எதிர்காலம் இருப்பதாக நம்புகின்றன.
இவற்றை கொண்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரங்கள் மூலம் கொண்டு சேர்க்க முடியும். மேலும் பெரும் நிறுவனங்களின் ஸ்மார்ட் அசிஸ்டண்ட் சேவைகளில் வாடிக்கையாளர்களின் வாய்ஸ் டேட்டா மிக எளிதில் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.