கடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்

கடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்

ஆக்குபா கடற்கரையில் அமைந்துள்ள முதலாவது நீருக்குள் இருக்கும் ராணுவ அருங்காட்சியகத்தை ஜோர்டான் திறந்துள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், டாங்கிகள், படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உள்பட நீரில் மூழ்கிய பல ராணுவ வாகனங்களை ஜோர்டான் அரசு இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற செய்துள்ளது.

செங்கடலில் உள்ள பவள பாறைகளில் போர் புரிவது போன்ற வடிவமைப்பில் இந்த வாகனங்கள் உள்ளன.

இங்கு சுற்றுலா வருவோருக்கு புதுவித அருங்காட்சியக அனுபவத்தை இந்த காட்சிப்படுத்தல் வழங்குகிறது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.

விளையாட்டு, சுற்றுச்சூழல் மற்றும் கண்காட்சி பொருட்களை இதில் சேர்க்க போவதாக ஆக்குபா சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜோர்டான் ராயல் விமாகப்படை நன்கொடையாக வழங்கிய ராணுவ ஹெலிகேப்டர் ஒன்று, திறப்பு விழாவின்போது நீரில் மூழ்க செய்யப்பட்ட பல ராணுவ வாகனங்களில் ஒன்றாகும்.ஜோர்டான் ராயல் விமானப்படை நன்கொடையாக வழங்கிய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, திறப்பு விழாவின்போது நீரில் மூழ்க செய்யப்பட்ட பல ராணுவ வாகனங்களில் ஒன்றாகும்
அபாயகரமான பொருட்களும் அகற்றப்படுவதாக ஆக்குபா சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாகம் ஜோர்டான் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளதுஅபாயகரமான பொருட்களும் அகற்றப்படுவதாக ஆக்குபா சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாகம் ஜோர்டான் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளது
மூச்சு விடுவதற்கு உதவுகின்ற கருவிகளை பயன்படுத்துவோர், ஸ்கூபா முக்குளிப்போர் மற்றும் கண்ணாடி கூரையுடைய படகுகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த அருங்காட்சியதை கண்டு ரசிக்கலாம்.மூச்சு விடுவதற்கு உதவுகின்ற கருவிகளை பயன்படுத்துவோர், முக்குளிப்போர் மற்றும் கண்ணாடி கூரையுடைய படகுகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த அருங்காட்சியதை கண்டு ரசிக்கலாம்
செங்கடலின் வடக்கு பகுதியில் காணப்படும் பவள பாறைகள் முக்குளிப்போரும், பிற சுற்றுலா பயணிகளும் விரும்புகின்ற பிரபலமான பகுதியாகும்.செங்கடலின் வடக்கு பகுதியில் காணப்படும் பவள பாறைகள் முக்குளிப்போரும், பிற சுற்றுலா பயணிகளும் விரும்புகின்ற பிரபலமான பகுதியாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.