உலகின் ஆபத்தான சாலை

உலகின் ஆபத்தான சாலை

நார்வேயின் கட்டடக்கலைக்கு மகுடம் வைப்பது போல அமைந்திருக்கிறது அந்த சாலை. அட்லாண்டிக் கடல் சாலை என்று அழைக்கப்படும் இதன் நீளம் வெறும் 8.3 கிலோ மீட்டர்தான். இந்தத் தூரத்தைக் கடக்கவே ஒரு மணி நேரமாகும்! அந்தளவுக்கு மெதுவாக இதில் செல்ல வேண்டும்.

நார்வேஜியன் கடல் மேல் வளைந்து நெளிந்து மேலும் கீழுமாக செல்லும் எட்டுப் பாலங்கள் இச்சாலையை இணைக்கின்றன. உயரப் பறந்து அடிக்கும் அலை மற்றும் அதிவேகமாக வீசும் கடல் காற்றைச் சமாளிக்கும் திறமை உள்ளவர்களால் மட்டுமே இதில் வாகனங்களை ஓட்ட முடியும்.

இல்லையென்றால் அலையும் காற்றும் வாகனத்துடன் அப்படியே உங்களைக் கடலுக்குள் இழுத்து விடும். இதனால்தான் இதனை உலகின் ஆபத்தான சாலை என்று எச்சரிக்கின்றனர். சாலையைப் பார்வையிடுவதற்காக மட்டுமே சுற்றுலாப் பயணிகள் இங்கே விசிட் அடிக்கிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.