உடல் எடையை குறைக்கும் உணவுகள்

உடல் எடையை குறைக்கும் உணவுகள்

உடல் எடையைக் குறைப்பது என்பது பலருக்கு மிகவும் சவாலான விஷயம் தான். ஏனென்றால் இதுவரை நமக்கிருந்த தினசரி பழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை என அத்தனையும் மாற்ற வேண்டியிருக்கும். அதில் மிக முக்கியமான முதன்மையான விஷயம் என்பது உணவு தான். நான்கு விதமான உணவு இணைகளை சாப்பிட்டு வந்தால் மிக வேகமாக எடை குறையும்.

குறைந்த அளவில் சிக்கன் சாப்பிட்டாலே உங்களுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வு உண்டாகும். தசைகளும் வலுவடையும். எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்குளுக்கு சிக்கன் ஒரு நல்ல சாய்ஸ் அல்ல. அதை தவிர்ப்பதே நல்லது. அதேசமயம் எடை குறைக்க வேண்டும் என்பவர்கள் சிக்கனின் மார்புப்பகுதியை தேர்வு செய்யுங்கள். அதுதான் முழுக்க முழுக்க சதைப்பகுதியாக இருக்கும்.

அந்த சிக்கனோடு மிளகாயை மிக அதிகமாகச் சேர்த்து சாப்பிட்டீர்கள் என்றால் நாளைடைவில் எடை குறையும். மிளகாய் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். எனவே சிக்கன் பிரஸ்ட்டில் நல்ல மிளகாயை அரைத்த மசாலாவும் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்து ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். இது சுவையான உணவாக இருப்பதுடன், எடையைக் குறைக்கும் ஒரு உத்தியாகவும் உள்ளது.

பொதுவாக பிரட் ஆரோக்கியமான உணவு என்று சொல்கிறோம். ஆனால் அதிலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஒயிட் பிரட்டை விடவும் ஹோல் வீட் (முழு தானியம் கோதுமை) பிரட் தான் ஆரோக்கியமானது. அதில்தான் கோதுமையின் முழுமையான நார்ச்சத்தும் கிடைக்கும். அந்த கோதுமை பிரட்டில், மிகவும் எளிதாக அதேசமயம் சுவையான ரெசிபி ஒன்று இருக்கிறது.

பொதுவாக பழம் (பட்டர் புரூட்) கொழுப்பைக் கரைக்கும். எடையைக் குறைக்கும் என்பது தெரியும். அதனுடன் அதிக நார்ச்சத்தான கோதுமை பிரட்டும் சேரும் போதும் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். இந்த பழத்தை தோல் நீக்கிவிட்டு, நன்கு மசித்து அதில் சிறிதளவு மிளகாயும் உப்பும் எலுமிச்சையும் சுவைக்காக சேர்த்துக்கொண்டு, அதை பிரட்டில் டோஸ்ட்டாக தடவி சாப்பிடுங்கள். இது உங்களை சிக்கென்று மாற்றிவிடும்.

பொதுவாக உடல் எடையைக் குறைப்பவர்களின் முதல் சாய்ஸாக கிரீன் டீ இருக்கும். அதனுடன் சில துளிகள் எலுமிச்சையும் சில புதினா இலைகளும் சேர்த்துக் குடிக்க வேண்டும். கிரீன் டீயுடன் எலுமிச்சையும் புதினாவும் சேர்க்கும் போது, அதில் உள்ள சத்துப் பொருட்கள் உடல் எடையை மிக வேகமாகக் குறைக்கச் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.