#இவள்

#இவள்

எங்கேயோ பறக்க துடிக்கும் என் எண்ணங்கள்..
எதை நோக்கியோ என் பயணங்கள்.. 💔
வாழ்ந்துவிட துடிக்கும் என் மேலே, 
எத்தனையோ வாள் வீச்சுக்கள்.. 💔

அருவருக்கும் வகையில் ஆணவங்கள்,
அதிகாரத்திமிர் நிறைந்த சிரிப்புக்கள்,💔
நெஞ்சை நொருக்கும் கடின சொற்கள்,
மெல்ல துடிக்கச்செய்யும் செயல்கள்,💔

வாலிபத்தின் முதற் படியிலே,
வயோதிபத்தின் அனுபவங்கள்… 💔
வாழும் இந்த மண் மீதிலே
வஞ்சனையின் வாசங்கள்.. 💔

விண்ணளவு பாரங்கள்,
இடையிடையே வண்ணமிழந்த
சோகங்கள்💔

சுற்றி நிற்போர் நட்புக் கரம் நீட்ட,
கூட இருப்போர் நகைசுவை பேச, 💔
அத்தனையும் விழலுக்கிறைத்த நீராய்,
ஊமை காயங்கள் மட்டும் நெஞ்சிலே மீதியாய்… 💔

பந்தி முந்தும் சிலரை போலே,
முந்தி நிற்பது துன்பம் தானோ… 💔
வந்து தொடரும் அல்லல் எல்லாம்,
நின்று கொல்லும் தலைவிதி பெற்றேன்..💔

ஆயிரமாயிரம் அனுபவங்கள்,
அத்தனையும் தாங்கும் மனமாய்
இருப்பதில் கொஞ்சம் மகிழ்ந்தவளாய்💔

#ப்ரியா_காசிநாதன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.